ETV Bharat / state

சிபிஐ நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜர்! - JAFFER SADIQ CASE

ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் விசாரணைக்காக திரைப்பட இயக்குநர் அமீர் நேற்று (ஜன.24) சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னை உயர்நீதிமன்றம், ஜாபர் சாதிக் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம், ஜாபர் சாதிக் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 7:23 AM IST

Updated : Jan 25, 2025, 11:20 AM IST

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், கடந்த 2024 ஜூன் 26ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்கள் மீதும், ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்வழக்கு கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன்பு நேற்று (ஜன.24) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமீர் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நோரோடின், அப்துல் ரஹீம் ஜின்னா, ஃபெரோஸ்கான் போஹரி (எ) ஃபெரோஸ் கான் ஆகிய மூன்று பேரும் முகவரி மாறியுள்ளதால், சம்மன் சென்றடையவில்லை.

இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை! கொத்தாக சிக்கிய 9 பேர்!

எனவே, இறுதி வாய்ப்பாக சம்மன் வழங்க வேண்டும். அடுத்த விசாரணைக்குள் ஆஜராகவில்லை என்றால் அது தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணை வருகிற பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Last Updated : Jan 25, 2025, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.