ஆன்டிகுவா:ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. 20 அணிகள் பங்கேற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு அதாவது 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் 2ல் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் இன்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்கா- தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
ஆன்டிகுவா நார்த் சவுண்ட்டில் உள்ள 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்தில், இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, டாஸ் வென்ற அமெரிக்கா அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.