ஐதராபாத்: உலகின் கொடிய நோய்களில் புற்றுநோயும் ஒன்று. கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல வகையான புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடிய வகையில் இருந்தாலும் இன்னும், சில புற்றுநோய்களுக்கு மருந்து என்பது கண்டுபிடிக்கபடாமலேயே உள்ளதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.
இருப்பினும், குறிப்பிட்ட சிலர் புற்றுநோய்களில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் படைத்து உள்ளனர். அவர்களது வாழ்க்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் இருக்கும். அப்படி விளையாட்டு துறையில் இருந்து புற்றுநோய் பாதித்து, அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்கள் குறித்து இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம்.
லியாண்டர் பயஸ்: நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டஸ் பயஸ்க்கு கடந்த 2003ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இடது பக்க மூளையில் 4 சென்டி மீட்டர் அளவில் ஏற்பட்ட இன்பக்ஷன் காரணமாக அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அதில் இருந்து குணமடைந்த லியாண்டர் பயஸ் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி வரை சென்று மைல்கல் படைத்தார்.
யுவராஜ் சிங்:இந்திய கிரிக்கெட் அணி 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பைகளை வெல்ல முக்கிய காரணியாக இருந்தவர் யுவராஜ் சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதித்த யுவராஜ் சிங், அதில் இருந்து மீண்டு வந்து கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடினார். தற்போது YouWeCan என்ற தொண்டு அமைப்பை தொடங்கி அதன் மூலம் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை பெற யுவராஜ் சிங் உதவி வருகிறார்.
லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் (Lance Armstrong): அமெரிக்காவை சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரரான லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் கடந்த 1996ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானார். ஆண் உறுப்பில் உருவான புற்றுநோய் மெல்ல நுரையீரல், குடல் மற்றும் மூளை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.