ETV Bharat / state

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி.. அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை முதல் கடும் விதிமுறைகள் அமல்! - ANNA UNIVERSITY RESTRICTIONS

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக பல்கலைக்கழக பதிவாளர் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் -கோப்புப்படம்
அண்ணா பல்கலைக்கழகம் -கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 5:59 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதி, உணவகம் மற்றும் வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தேர்வு முடிந்து நாளை (ஜனவரி 6) திங்கட்கிழமை வகுப்புகள் துவங்க உள்ளன.

இதையடுத்து, மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு, புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விடுதிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் அமலுக்கு வரும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

கல்லூரிகள் திறக்கப்படும்போது முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் பிரகாஷ், அனைத்து க்ல்லூரிகளின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,

  • வகுப்புகளில் உள்ள மேசைகள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
  • பழுதடைந்து இருக்கும் மேசைகளை உடனடியாக மாற்றி தர வேண்டும்.
  • மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை உட்பட அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • என்எஸ்எஸ், ஒய்ஆர்சி, என்எஸ்ஓ பயிற்சிகளின்போது வகுப்பாசிரியர்கள் உடன் இருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டில் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர்களுக்கு உதவிபுரியும் வகையில் ஹெல்ப் டெஸ்க்குகள் (Help Desk) பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு:

  • வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் துறைக்கான தேவைகளை குறித்த பின்னூட்டத்தை (feedback) மாணவர்கள் தெரிவிக்கும் வகையில் துறை தலைவருடன் கூட்டம் நடத்த வேண்டும்.
  • உணவகங்களில் தரமான உணவு வழங்க வேண்டும். பணி முடிந்ததும் கட்டுமான தொழிலாளர்கள் பல்கலையை விட்டு வெளியேற வேண்டும்.
  • வெளி ஆட்கள் வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது.
  • பல்கலைக்கழக வளாகத்திற்குள் ரோந்து பணி மாலை மற்றும் இரவு நேரத்தில் நடைபெற வேண்டும்.
  • பல்கலைக்கழக மாணவர்கள் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்கும் POSH கமிட்டி மாதம் மாதம் குறைகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.
  • மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் 24 மணி நேரமும் ஹெல்த் சென்டர் (Health Center) செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க: இரவில் கொள்ளை, பகலில் பிரியாணி கடை....ஞானசேகரனின் இரட்டை வாழ்க்கை குறித்து போலீஸ் விசாரணை!

விடுதி நேரத்தில் மாற்றமில்லை:

  • பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தை பயன்படுத்த வேண்டும்.
  • பல்கலைகழகத்தில் வெளிநபர்கள் நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கான வகுப்பு நேரம், விடுதி நேரம் மற்றும் உணவக நேரத்தில் மாற்றமில்லை.
  • தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மின்விளக்குகள் மர்றூம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.

அடையாள அட்டை நிச்சயம்:

  • மாணவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும்.
  • அடையாள அட்டை இல்லாத சமயத்தில் மாணவர்களின் பெயர், பதிவு எண், வளாகத்திற்குள் வரும் மற்றும் வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை பாதுகாவலர்கள் பதிவு செய்ய வேண்டும்.
  • கல்வி, மன அழுத்தம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • மாணவர்கள் காவலன் செயலியை (Kavalan SOS App) பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
  • மேலும், பல்கலைக்கழகத்தின் உதவி எண்ணிலும் தொடர்புக் கொண்டு தெரிவிக்கலாம்.
  • மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளான தொழில்நுட்ப திருவிழா, கலச்சார நிகழ்ச்சி போன்றவற்றிக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு கேட் வரை அனுமதி:

  • வளாகத்திற்குள் அனுமதி பெற்று வரும் நபர்கள், அதற்கான அடையாள பாஸ் பெற்றுக் கொண்டு வரவேண்டும்.
  • பின்னர் வெளியில் செல்லும் போது அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.
  • பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்களை தவிர்த்து சைக்கிள் ஓட்ட அறிவுறுத்த வேண்டும்.
  • ஸ்விக்கி (Swiggy ) சோமேட்டோ (zomato), அமேசான் (amazon) உள்ளிட்ட செயலிகள் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய வரும் வாகனங்கள் பல்கலைக்கழக கேட் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • வகுப்பு நேரத்தை தாண்டி அல்லது வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • வகுப்பு நேரம் முடிவடைவதற்குள் பேராசிரியர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை மாணவர்களிடம் வகுப்பாசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.