ஐதராபாத்:சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக பலோன் டி ஓர் விருது கருதப்படுகிறது. இந்நிலையில், 68வது பலோன் டி ஓர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று (அக்.28) திங்கள்கிழமை மாலை பாரீசில் உள்ள தியேட்டர் டு சாட்லெட் அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான பலோன் டி ஓர் விருதை ஸ்பெயின் வீரர் ரோட்ரிக்கு (Rodri) பிரான்ஸ் கால்பந்தாட்ட கூட்டமைப்பு வழங்கி கவுரவித்தது. மான்செஸ்டர் சிட்டி அணியில் நடுக்கள வீரராக ரோட்ரி விளையாடி வரும் நிலையில், கடந்த சீசனில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
முன்னதாக ரியல் மாட்ரிட் அணியின் வீரர்கள் வின்சியஸ் ஜூனியர் மற்றும் ஜூட் பெல்லிங்காம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. வின்சியஸ் ஜூனியருக்கு தான் மதிப்புமிக்க விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் ரோட்ரி பலோன் டி ஓர் விருதை தட்டிச் சென்றார்.
மேலும், பலோன் டி ஓர் விருதை வென்ற முதல் ஸ்பெயின் நடுக்கள வீரர் என்ற சிறப்பையும் ரோட்ரி பெற்றுள்ளார். முன்னதாக 1990ஆம் ஆண்டு லோதர் மத்தாஸ் என்பவர் இந்த விருதை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக கால்பந்து ஜாம்பவான்கள் லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
கால்பந்தில் பரம போட்டியாளர்களாக வலம் வரும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை இந்த விருதை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க விருதை வெல்ல லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரின் பெயர் பரிந்துரைக்கப்படாதது அவர்களது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதேபோல் மற்றொரு ஸ்பெயின் வீரர் லெமின் யமால் 21 வயதுக்குட்பட்டோருக்கான கோபா விருது பெற்றார். மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை ஐதான பான்மடி (Aitana Bonmati) இரண்டாவது முறையாக பலோன் டி ஓர் விருதை வென்றார்.
பலோன் டி ஓர் விருது என்றால் என்ன?: