பெர்லின்:ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் (euro champions 2024) இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் தமக்கு கிடைத்த பீரி கிக் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதியின் 47-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகன் கோல் பால்மர் அபாரமாக கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இதனால் கடந்த முறை போல இந்த முறை போட்டி சமனில் முடிந்து பெனால்டி முறையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்குதான் ட்விஸ்ட்டான நிகழ்வே அரங்கேறியது. ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வந்த மைக்கேல் ஓயர்சபால் போட்டியின் 86வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் பரப்பானது. கடைசி நிமிடம் வரை கோல் அடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக முயற்சித்து கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.