தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான்! - சர்ஃப்ராஸ் கான் சாதனைகள்

Ind vs Eng Test Cricket Match: இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இன்று (பிப்.15) இங்கிலாந்துக்கு எதிராக தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார்.

இந்திய அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான்
இந்திய அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 3:48 PM IST

ஹைதராபாத்: மும்பையில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளே உள்ளிட்டோர் அடங்கிய வரிசையில் தற்போது சர்ஃப்ராஸ் கானும் இணைந்து உள்ளார்.

26 வயதான சர்ஃப்ராஸ் கான் இன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கியுள்ளார். இன்று சர்ஃப்ராஸ் கானுக்கு கௌரவமான இந்திய அணியின் தொப்பியை முன்னாள் இந்திய வீரர் அனில் கும்பிளே வழங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த சர்ஃப்ராஸ் கானின் தந்தை உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

அப்போது சர்ஃப்ராஸ் கானிடம் பேசிய கும்ப்ளே, "நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. உங்கள் சாதனையை நினைத்து தங்களின் குடும்பம் நிச்சயம் பெருமைப்படும். நீங்கள் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தும் உங்களுக்கு ஒரு சில ஏமாற்றங்கள் இருக்கும். ஆனால் தற்போது தான் உங்கள் கிரிக்கெட் வாழ்வின் தொடக்கம்.

உங்களுக்கு முன்னதாக வெறும் 310 பேர் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உங்களுக்கு இன்னும் நீண்ட நெடிய கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது" என்று கூறினார். மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர் விநாயக் சமந்த் பேசுகையில், "சர்ஃப்ராஸ் கான் கடின உழைப்பாளி. அவர் கண்டிப்பாக இங்கிலாந்து வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்" எனக் கூறினார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சீனியர் ஊழியர், “இந்திய அணிக்காக ரன் மிஷின் சர்ஃப்ராஸ் கான் இன்று விளையாடுகிறார். அவரது தந்தை நவ்ஷத் கானின் கனவு நினைவானது. சர்ஃப்ராஸ் கானை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி” என்றார். சர்ஃப்ராஸ் கான் 12 வயதிலேயே பள்ளிகளுக்கு இடையேயான ஹாரிஸ் ஷீல்ட் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

அப்போட்டியில் 56 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 439 ரன்கள் எடுத்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பெங்கால் எதிராக மும்பை அணிக்காக தனது முதல் உள்ளூர் போட்டியில் விளையாடினார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக தேர்வாகி விளையாடினார். சர்ஃப்ராஸ் கான் 45 முதல் நிலை போட்டிகளில் விளையாடி 3912 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 14 சதங்கள், 11 அரைசதங்கள் எடுத்துள்ளார். முதல் நிலை போட்டிகளில் அதிகபட்சமாக 301 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details