ஹைதராபாத்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் உடலளவில் மிக வலிமையானவர்கள் எனக் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரகுவன்ஷி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில்,"சாய்னா நேவால் ஜஸ்பிரித் பும்ராவின் 150 கி.மீ பந்தை எதிர்கொள்வதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த பதிவை டெலிட் செய்து அதற்கு மன்னிப்பும் கோரி உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சாய்னா நேவால் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "கிரிக்கெட்டில் எல்லாரும் விராட், ரோகித் போல் ஆகி விடுவதில்லை. சிலர் மட்டுமே அந்த இடத்தை அடைகின்றனர். கிரிக்கெட் ஒரு திறன் சார்ந்த விளையாட்டு.
பந்து வீச்சாளர்கள் மட்டும் வலிமையாக இருக்கிறார்கள் என ஒத்துக்கொள்கிறேன். நான் எதற்காக பும்ராவை எதிர்கொள்ள வேண்டும்? நான் எட்டு வருடமாக பேட்மிண்டன் விளையாடுகிறேன் நிச்சயமாக பும்ரா பந்தை எதிர்க்கொள்வேன். மேலும், ஜஸ்பிரித் பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவரால் எனது ஸ்மாஷை எதிர்க்கொள்ள இயலாது.
நாம் நம் தேசத்துக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள் என்று தான் கூறுகிறேன். ஆனால் நாம் எப்போதும் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீது தான் கவனத்தைச் செலுத்துகிறோம்" என்று கூறினார். சாய்னா கூறுவது நியாமாக இருந்தாலும், பும்ராவை பற்றி பேசியதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் கால்இறுதி: இந்திய வீராங்கனை ரித்திகா அதிர்ச்சி தோல்வி! - paris olympics 2024