பார்படாஸ் : டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்குமான இறுதி போட்டி நாளை நடைபெறுகின்றது. இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு தோல்விகளையும் சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுமே கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம். இந்திய அணியை பொருத்தவரை லீக் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது. அதே போன்று தென்னாப்பிரிக்கா அணி குரூப் டி பிரிவில் இடம் பெற்றிருந்தது. இரு அணிகளும் லீக் தொடரில் விளையாடி சூப்பர் 8க்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா குரூப் 1 பிரிவிலும், தென்னாப்பிரிக்கா அணி குரூப் 2 பிரிவிலும் தகுதி பெற்றது.
சூப்பர் 8 : சூப்பர் 8 குரூப் 2வில் முதலில், விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதே போல், சூப்பர் 8 குரூப் 1 இல் முதலில் விளையாடிய இந்தியா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரையிறுதி போட்டி: அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல், அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.