ETV Bharat / state

தாம்பரம் சப்-வேயில் தனியாக நடந்தவருக்கு அதிர்ச்சி.. மாடிக்கு போன 15 வயது சிறுமிக்கு நடந்த சோகம்..! - CHENNAI CRIME TODAY

சென்னை மாநகரில் நேற்று முதல் நடந்த குறிப்பிட்ட குற்ற சம்பவங்களை இந்த செய்தி தொகுப்பில் சுருக்கமாக பார்க்கலாம்.

சென்னை குற்றச் செய்திகள்
சென்னை குற்றச் செய்திகள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 12:11 PM IST

சென்னை: 15 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு; சென்னை சோகம்

சென்னை, மடிப்பாக்கம், ராம் நகரில் தனியார் நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் யோகேஸ்வரன் - ராஜேஷ்வரி தம்பதி. யோகேஸ்வரன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஹரிணி என்ற மகள் இருந்தார். அவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று யோகேஸ்வரன் வீட்டில் துவைத்த துணிகளை வீட்டின் நான்காவது தளத்தில் உள்ள மாடியில் காய வைத்துள்ளனர். அப்போது மாலை நேரத்தில் மழை வருவது போல் இருந்ததால், மொட்டை மாடியில் காயவைத்த துணிகளை எடுப்பதற்காக சிறுமி ஹரினி சென்று உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக துணிகளை எடுத்துக்கொண்டிருந்த போது ஹரிணி நான்காவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உள்ளார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து அவரது தந்த யோகேஸ்வரன் ஹரினியை மீடு காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த ஹரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் டெண்டர் முறைகேடு; சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் டெண்டர் ஒதுக்கியதில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற புகழேந்தி என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சன்சைன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனையை சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ராயப்பேட்டை, அம்மையப்பன் தெருவில் உள்ள நிதி நிறுவன மேலாளர் சேகர் என்பவரது வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தில் காண்ட்ராக்டர் சண்முகம் என்பவரது வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ அதிகாரிகளின் சோதனையின் முடிவுக்கு பின்னரே இந்த சோதனைக்கான முழு காரணம் என்னவென்றும், இந்த சோதனையில் ஏதாவது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் அருகே பட்டப்பகலில் கத்தியால் தாக்கி வழிப்பறி

சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் அவசர உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. அதில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருபவர் தேவா (25). இவர் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சுரங்க பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடிரென வழிமறித்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அவரிடம் சென்று பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். அதற்கு தர மறுத்ததால் அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து தேவாவின் முகத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து செல்போன், பணம், பர்சை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முகத்தில் ஒன்பது தையல் போடப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.