ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெக ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. எதிர்பாராத பல சம்பவங்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் நடைபெற்றன. கடந்த இரண்டு நாட்களில் 639 கோடியே 15 லட்ச ரூபாயை மொத்தம் உள்ள 10 அணிகளும் செலவழித்துள்ளன.
இரண்டு நாட்களில் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 395 வீரர்கள் அன்சோல்டு என எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படவில்லை. அதிகபட்சமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
𝗥𝗲𝗰𝗼𝗿𝗱-𝗯𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗵 🔝
— IndianPremierLeague (@IPL) November 24, 2024
Snippets of how that Historic bidding process panned out for Rishabh Pant 🎥 🔽 #TATAIPLAuction | #TATAIPL | @RishabhPant17 | @LucknowIPL | #LSG pic.twitter.com/grfmkuCWLD
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமகா ஜோஸ் பட்லர் 15 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். டேவிட் வார்னர், ஜானி பெர்ஸ்டோவ், ஷர்துல் தாகூர், முஸ்தபிசுர் ரஹமான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படாமல் அன்சோல்டு வீரர்களாகினர். அணி மற்றும் வீரர்கள் பட்டியல்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ்
மொத்த வீரர்கள்: 25 (7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ஷேக் ரஷித், தீபக் ஹூடா, ஆண்ட்ரே சித்தார்த்.
விக்கெட் கீப்பர்: டிவான் கான்வே, எம்.எஸ் தோனி, வான்ஷ் பேடி.
ஆல்-ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரன், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால்,
வேகப்பந்து வீச்சாளர்கள்: மதிஷா பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜ்பானித் சிங், நாதன் எலிஸ்.
உத்தேச ஆடும் லெவன் அணி: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி, முகேஷ் சவுத்ரி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதிஷா பத்திரனா.
இம்பேக்ட் வீரர்கள்: கலீல் அகமது அல்லது ஷேக் ரஷித்.
UNGAL ANBUDEN,
— Chennai Super Kings (@ChennaiIPL) November 25, 2024
The Pride of '25! 🦁#WhistlePodu #Yellove #SuperAuction🦁💛 pic.twitter.com/AXDgGyWdrB
2. மும்பை இந்தியன்ஸ்
மொத்த வீரர்கள்: 23 (8 வெளிநாட்டினர்)
பேட்ஸ்மேன்கள்: சூர்யகுமார் யாதவ், ரோகித் ஷர்மா, திலக் வர்மா, பெவன் ஜான் ஜேக்கப்ஸ்.
விக்கெட் கீப்பர்: ராபின் மின்ஜ், ரியான் ரிக்கல்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித்.
ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, நமன் டிஹெர், வில் ஜாக்ஸ், ராஜ் அங்கத் பாவா, விக்னேஷ் புத்தூர்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: அல்லா கசன்பர், கர்ன் ஷர்மா, மிட்செல் சான்ட்னர்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஷ்வினி குமார், ரீஸ் டாப்லி, சத்யநாராயண் ராஜு, அர்ஜுன் தெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ்.
உத்தேச ஆடும் லெவன் அணி: ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்ட்யா, நமன் தீர், அல்லா கசன்பர் அல்லது மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர்.
இம்பேக்ட் வீரர்கள்: ராபின் மிஞ்ச் அல்லது ராஜ் அங்கத் பவா.
𝐂𝐋𝐀𝐒𝐒 𝐎𝐅 2⃣0⃣2⃣5⃣✨💙#MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPLAuction pic.twitter.com/JwwPnqPyrd
— Mumbai Indians (@mipaltan) November 25, 2024
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மொத்த வீரர்கள்: 22 (8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட், மனோஜ் பண்டேஜ், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா.
விக்கெட் கீப்பர்: பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா
ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், குர்ணால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், மோஹித் ரதி.
சுழற்பந்து வீசள்ளார்கள்: சுயாஷ் சர்மா, அபிநந்தன் சிங்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ரசிக் சலாம், நுவான் துஷாரா, லுங்கி நிகிடி.
உத்தேச ஆடும் லெவன் அணி: விராட் கோலி ஷர்மா, பில் சால்ட், ஜித்தேஷ் சர்மா, ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், குருனால் பாண்டியா, டிம் டேவிட், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார்.
இம்பேக்ட் வீரர்கள்: ரசிக் சலாம் அல்லது ஸ்வப்னில் சிங்.
Presenting to you, the #ClassOf2025! 💪
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 26, 2024
A powerhouse of a squad with reliable batters, lethal bowlers, and ace all-rounders, Summer 2025 we’re coming in hot! ❤️🔥#PlayBold #ನಮ್ಮRCB #IPLAuction #BidForBold #IPL2025 pic.twitter.com/v4ywTyYh65
4. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மொத்த வீரர்கள்: 20 (7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர், அனிகேத் வர்மா, சச்சின் பேபி.
விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், அதர்வா டைட்
ஆல்-ரவுண்டர்கள்: அபிஷேக் குமார் ரெட்டி, நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: ஆடம் ஜம்பா, ராகுல் சாஹர், ஜீஷன் அன்சாரி.
வேகப்பந்து வீச்சாளர்கள்: முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங், ஜெய்தேவ் உனட்கட், பிரைடன் கார்ஸ், இஷான் மலிங்கா
உத்தேச ஆடும் லெவன் அணி: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், அபினவ் அனிகேத், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஆடம் ஜாம்பா.
இம்பேக்ட் வீரர்: ராகுல் சாஹர் அல்லது சச்சின் பேபி.
What an unforgettable journey it’s been 🥹
— SunRisers Hyderabad (@SunRisers) November 25, 2024
Thank you, dear Risers, for everything you’ve given the #OrangeArmy. All the very best to all of you 🧡🔥#PlayWithFire #TATAIPL #TATAIPLAuction pic.twitter.com/PEPmwzE87J
5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மொத்த வீரர்கள்: 21 (8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: ரின்கு சிங், ரோவ்மேன் பவல், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, அஜிங்க்யா ரஹானே.
விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக், ரஹ்மனுல்லா குர்பாஸ்.
ஆல்-ரவுண்டர்கள்: வெங்கடேஷ் ஐயர், ஆந்திரே ரஸ்செல், சுனில் நரேன், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், மொயீன் அலி.
சுழற்பந்து வீச்சாளர்கள்: வருண் சக்ரவர்த்தி, மயங்க் மார்கண்டே
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன், உம்ரான் மாலிக்.
உத்தேச ஆடும் லெவன் அணி: குயின்டன் டி காக், சுனில் நரேன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆந்திரே ரஸ்செல், ரமன்தீப் சிங், உம்ரான் மாலிக், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
இம்பேக்ட் வீரர்கள்: அஜிங்க்யா ரஹானே அல்லது வைபவ் அரோரா.
Amader Knights for #IPL2025, Kolkata! 💜 pic.twitter.com/xZO19jkbPN
— KolkataKnightRiders (@KKRiders) November 25, 2024
6. பஞ்சாப் கிங்ஸ்
மொத்த வீரர்கள்: 25 (8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, ஹர்னூர் சிங் பன்னு, பிரியான்ஷ் ஆர்யா, பைலா அவினாஷ்.
விக்கெட் கீப்பர்: ஜோஷ் இங்கிலிஸ், விஷ்ணு வினோத், பிரப்சிம்ரன் சிங்.
ஆல்-ரவுண்டர்கள்: கிளைன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், அஸ்மத்துல்லா உமர்சாய், ஆரோன் ஹார்டி, முஷிர் கான், சூர்யான்ஷ் ஷெட்ஜ்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: யுஸ்வேந்திர சாஹல், பிரவீன் துபே.
வேகப்பந்து வீச்சாளர்கள்: அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யாஷ் தாக்கூர், விஜய்குமார் வைஷக், குல்தீப் சென், சேவியர் பிரட்லெட்.
உத்தேச ஆடும் லெவன் அணி: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா கிளைன் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், விஜய்குமார் வைஷக், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இம்பேக்ட் வீரர்கள்: விஷ்னு வினோத் அல்லது குல்தீப் சென்.
#𝐒𝐚𝐝𝐝𝐚𝐒𝐪𝐮𝐚𝐝 🔒❤️#IPL2025Auction #PunjabKings pic.twitter.com/Mxppagzd4Z
— Punjab Kings (@PunjabKingsIPL) November 25, 2024
7. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
மொத்த வீரர்கள்: 24 (6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஹிம்மத் சிங், மேத்யூ ப்ரீட்ஸ்கே.
விக்கெட் கீப்பர்கள்: ரிஷப் பன்ட், நிக்கோலஸ் பூரன், ஆர்யன் ஜூயல்.
ஆல்-ரவுண்டர்கள்: அப்துல் ஷமாத், மிட்செல் மார்ஷ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி.
சுழற்பந்து வீச்சாளர்கள்: ரவி பிஷ்னோய், எம் சித்தார்த், திக்வேஷ் சிங்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆகாஷ் தீப், அவேஷ் கான், ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ்.
உத்தேச ஆடும் லெவன் அணி: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ராம், ரிஷப் பன்ட், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், டேவிட் மில்லர், மொஹ்சின் கான், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்.
இம்பேக்ட் வீரர்கள்: ஷாபாஸ் அகமது அல்லது ஆர்யன் ஜூயல்.
Lucknow, aapke Super Giants taiyyar hai 🔥 pic.twitter.com/d6M7TVpRNa
— Lucknow Super Giants (@LucknowIPL) November 26, 2024
8.டெல்லி கேபிட்டல்ஸ்
மொத்த வீரர்கள்: 23 (7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஹாரி புரூக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தக்கவைக்கப்பட்டவர்), பாப் டு பிளெஸ்ஸிஸ், கருண் நாயர்.
விக்கெட் கீப்பர்: கேஎல் ராகுல், அபிஷேக் போரல், டொனோவன் பெர்ரேரியா.
ஆல்-ரவுண்டர்கள்: அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, சமீர் ரிஸ்வி, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி
சுழற்பந்து வீச்சாளர்: குல்தீப் யாதவ்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், டி.நடராஜன், மோகித் சர்மா, துஷ்மந்த சமீரா.
உத்தேச ஆடும் லெவன் அணி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், ஹாரி புரூக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன், முகேஷ் குமார்.
இம்பேக்ட் வீரர்கள்: சமீர் ரிஸ்வி அல்லது மோகித் சர்மா.
Dilli - we're ready for IPL 2025! 💙 pic.twitter.com/H8H1kew2Jq
— Delhi Capitals (@DelhiCapitals) November 25, 2024
9. ராஜஸ்தான் ராயல்ஸ்
மொத்த வீரர்கள்: 20 (6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி.
விக்கெட் கீப்பர்: சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், குணால் சிங் ரத்தோட்.
ஆல்-ரவுண்டர்கள்: ரியான் பராக், நிதிஷ் ரானா, யுத்வீர் சிங்,
சுழற்பந்து வீச்சாளார்கள்: வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சேனா, குமார் கார்த்திகேயா.
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால், பசல்ஹக் பரூக்கி, குவேனா எம்பாகா, அசோக் ஷர்மா.
உத்தேசஆடும் லெவன் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, ரியான் பராக், வைபவ் சூர்யவன்ஷி, ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி அல்லது ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே
இம்பேக்ட் வீரர்கள்: ஆகாஷ் மத்வால் அல்லது ஷுபம் துபே.
Your Royals of 2025. Built. Assembled. RReady! 💗🔥 pic.twitter.com/omIXIDQsF6
— Rajasthan Royals (@rajasthanroyals) November 25, 2024
10. குஜராத் டைட்டன்ஸ்
பேட்ஸ்மேன்கள்: சுப்மான் கில், சாய் சுதர்ஷன், ராகுல் தெவாடியா, ஷெர்பேன் ரூதர்போர்ட்.
விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத்.
ஆல்-ரவுண்டர்கள்: ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், எம்.ஷாருக் கான், மாஹுபல் லொம்ரோர், நிஷாந்த் சித்து, அர்ஷத் கான், ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: மானவ் சுதர், சாய் கிஷோர்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: காஜிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெரால்ட் கோட்ஸி, குர்னூர் ப்ரார், இஷாந்த் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா.
உத்தேச ஆடும் லெவன் அணி: சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், எம்.ஷாருக் கான், ரஷித் கான், ராகுல் தெவாடியா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கஜிசோ ரபாடா.
இம்பேக்ட் வீரர்கள்: இஷாந்த் சர்மா அல்லது அனுஜ் ராவத்.
Aapda Titans, Aapdo home, Aapdo pride 💙#AavaDe | #TATAIPLAuction | #TATAIPL pic.twitter.com/ld2N0qWCpm
— Gujarat Titans (@gujarat_titans) November 25, 2024
இதையும் படிங்க: சென்னையில் தொடங்கிய பயணம்! ஐபிஎல்லின் இளம் கோடீஸ்வரர்! யார் இந்த வைபவ் சூர்யவன்சி!