ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த தீபக் சஹரை 9.5 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணியில் தோனியின் செல்லப் பிள்ளை என்று அழைக்கப்பட்டவர் தான் தீபக் சஹர். மைதானத்தில் வைத்து இருவரும் அடித்துக் கொள்ளும் லூட்டிகள் அவ்வப்போது வைரலாகும்.
அதேபோல் மற்றொரு வீரர் துஷார் தேஷ்பாண்டே. அவரை 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தீபக் சஹரை ஏலத்தில் எடுக்க அனைத்து முயற்சிகளையும் துஷார் தேஷ்பாண்டேவுக்கும் சென்னை அணி நிர்வாகம் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக 6 கோடியே 25 லட்ச ரூபாய் வரை துஷார் தேஷ்பாண்டேவுக்காக சென்னை அணி நிதி ஒதுக்கியது.
இருப்பினும், 25 லட்ச ரூபாய் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை கைப்பற்றியது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த போது தனக்கும், எம்.எஸ் தோனிக்கு இடையேயான உறவு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய, "தோனியை மிகவும் மிஸ் செய்வேன், எனது சிறந்த மற்றும் மோசமான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் எனது 100 சதவீத பங்களிப்பை அணிக்காக தொடர்ந்து வழங்குவேன். ராகுல் டிராவிட் பயிற்சி மற்றும் சஞ்சு சாம்சனின் தலைமையின் கீழ் புதிய அணியில் இணைவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இவர்கள் அனைவரும் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்" என்று துஷா தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
2022 முதல் 2024 ஐபிஎல் சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 39 போட்டிகளில் விளையாடி உள்ள துஷார் தேஷ்பாண்டே அதில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட துஷார் தேஷ்பாண்டே கடந்த நான்கு மாதங்களாக அங்கு ஓய்வு எடுத்தார்.
தற்போது பெங்களூரு உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் துஷார் தேஷ்பாண்டே அடுத்த ஆண்டு முதல் பாதியில் பழைய நிலைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கு முன் வரை டெல்லி அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டே, அதன்பின் சென்னை அணியில் இணைந்தார்.
இதையும் படிங்க: அவசரமாக நாடு திரும்பும் இந்திய அணியின் முக்கிய நபர்! ஆஸ்திரேலியா தொடரில் திடீர் மாற்றம்?