ETV Bharat / entertainment

”நீங்கள் காமெடியனா அல்லது கதாநாயகனா”... மேடையில் சூரியை கிண்டல் செய்த இளையராஜா!

Ilayaraja About soori: 'விடுதலை 2' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரியை பார்த்து இளையராஜா நீங்கள் காமெடியனா அல்லது கதாநாயகனா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

இளையராஜா, சூரி புகைப்படம்
இளையராஜா, சூரி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 27, 2024, 12:09 PM IST

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’விடுதலை 2’. விடுதலை முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை 2 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், ”சூரி, உங்களை கதாநாயகனாக மாற்றியது வெற்றிமாறன் தான் தற்போது எத்தனை திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறீர்கள் என கேட்டு, நீங்கள் காமெடி கதாபாத்திரத்தில் தானே நடித்து வந்தீர்கள், இப்போது கதாநாயகனாக நடிப்பது காமெடியா அல்லது கதாநாயகனா” என கிண்டல் செய்தார்.

அதனை தொடர்ந்து பேசிய இளையராஜா ”உங்களை போலவே நானும் படம் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். நான் தான் முதலில் படத்தை பார்ப்பேன், எனக்கு பிறகு தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள். படத்திற்கு நான் தான் முதல் ரசிகன், எனக்கு தானே படத்தை முதலில் காண்பிக்கிறீர்கள் என்றார்.

பின்னர் முதல் பாகத்தை பார்த்து இதே போல தான் இரண்டாம் பாகம் திரைப்படம் இருக்கும் என நினைக்காதீர்கள். விடுதலை இரண்டாம் பாகம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்கிறது. இந்தத் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். காரணம் இப்படத்தில் அவ்வளவு உழைப்பு இருக்கிறது” எனக் கூறினார்

தனது இசையமைப்பு குறித்து இளையராஜா பேசுகையில், “நான் ஒரு திரைப்படத்திற்கு எப்படி பாடல்கள் இசையமைப்பேன் என்றால் இயக்குநர்கள் சூழ்நிலையை சொல்லும் போது மனதில் ஒன்றும் இருக்காது வெறுமையாக இருக்கும். ஆனால் அதுவே ஆரம்பித்து விட்டது என்றால் வந்து கொண்டே இருக்கும். இப்படியாக ஒரு படத்திற்கு ஆகாயத்தில் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் படத்தின் இசையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருக்கும்.

ஆனால் நான் பணியாற்றிய தெலுங்கு படம் ஒன்றில் அவர்களே அனைத்தையும் எழுதிக் கொண்டு வந்து விட்டனர். பிறகு அவர்கள் எழுதி வைத்ததில் இருந்து பாடல்களை அமைத்தேன். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன், என்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படங்கள் அமைப்பது வேறு, அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு இசையமைப்பது வேறு.

இதையும் படிங்க: நயன்தாரா திருமணம் போல் நாக சைதன்யா திருமணம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமா?

இப்படியாக வெற்றிமாறனுடன் பணியாற்றும் போது அவரது செல்போனில் முழுவதும் படம் பிடித்து கொண்டிருந்தார். உடனே
மேடையில் அவரை பார்த்து அந்த வீடியோ பதிவை என்னிடம் கொடுத்து விடுங்கள் என நகைச்சுவையாக கூறினார் மேலும் அவர் அந்த வீடியோ பதிவை வேறு எங்காவது பதிவு செய்தால் நல்ல Price ( ஊக்கம்) கிடைக்கும்” என நகைச்சுவையாக கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.