பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா உலகின் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான கிரிகிஸ்தானின் ஐபெரி மெடெட் கைசியை எதிர்கொண்டார். போட்டி கடுமையாக இருந்த நிலையில் வெற்றிக்காக இரண்டு பேரும் மோதிக் கொண்டனர்.
வீணாக புள்ளிகள் இழப்பதை தவிர்க்க இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால ஆட்டம் கடும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. இறுதியில் 1-க்கு 1 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட டை பிரேக்கர் சுற்றில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடெட் கைசி வெற்றி பெற்றார்.