ETV Bharat / state

'எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது, இது நல்லதல்ல' - ஆளுநர் ரவி காட்டம்..! - GOVERNOR RAVI SLAMS DMK

சட்டப்பேரவையில் தமிழக அரசு தேசிய கீதத்தை புறக்கணித்ததை மட்டுமின்றி பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கியதாக ஆளுநர் ரவி சாடியுள்ளார்.

ஆளுநர் ரவி (கோப்புப்படம்), தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
ஆளுநர் ரவி (கோப்புப்படம்), தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் (credit - @rajbhavan_tn x account and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 7:00 PM IST

Updated : Jan 6, 2025, 7:30 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவக்கப்படும். அதன்படி 2025ம் ஆண்டிற்கான ஆளுநர் உரை சட்டப்பேரவையில் இன்று வாசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவியை மரபுப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டு ஆளுநர் இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் சட்டப்பேரவைக்கு காலை 9.27 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். ஆளுநர் ரவி 9.29 மணிக்கு பேரவைக்கு வந்தார். ஆளுநர் ரவி சட்டபேரவைத் தலைவரின் இருக்கைக்கு சென்றதும் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக காங்கிஸ், தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பினர். அதனிடையே ஆளுநர் பேச முயன்றார். அந்த நேரத்தில் அதிமுகவும் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்காெடுமையில் யார் அந்த சார் என கேட்டு கோஷம் போட்டனர். இதனால் அவையில் கூச்சல் நிலவியது. இந்த நிலையில் ஆளுநர் 9.33 மணிக்கு சட்டபேரவையில் இருந்து வெளியேறினார்.

உருக்கமான வேண்டுகோள்

ஆளுநர் வெளிநடப்பு செய்துவிட்டு மாளிகைக்கு சென்ற பிறகு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில், '' தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படை கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த் தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.

தேசிய கீதத்தை பாடுவதற்காக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதனை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதனால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்'' என இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை கண்டித்து வரும் 7ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

வெட்கக்கேடான முறை

அதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் மற்றொரு பதிவில் காட்டமான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், '' இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Jan 6, 2025, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.