ETV Bharat / state

தமிழகத்தின் முதல் மிதக்கும் படகு உணவகம்.. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்! - FLOATING RESTAURANT

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு மிதவை படகு உணவகம் (Floating Restaurant) இன்று திறக்கப்பட்டுள்ளது.

மிதவை படகு உணவகம்
மிதவை படகு உணவகம் (Credits - ETV Bharat Tamil Nadu, Grandeur Marine International,)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 22 hours ago

சென்னை: சுற்றுலா பயணிகளை பிரம்மிக்க வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக மிதவை படகு உணவகம் இன்று (ஜனவரி 7) செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மிதக்கும் படகு உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் ரூ. 5 கோடி செலவில் மிதவை படகு உணவகம் அமைக்கப்பட இருப்பதாக கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்டுக்காடு, அமைச்சர் பேட்டி (ETV Bharat Tamilnadu)

அதன்படி, தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை படகு உணவகம் முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குரு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு இன்று மாலை 5 மணியளவில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்துள்ளனர்.

இந்த மிதவை படகு உணவகத் திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

மிதவை படகு உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் ராஜேந்திரன் மற்றும்  அன்பரசன்
மிதவை படகு உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் ராஜேந்திரன் மற்றும் அன்பரசன் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை.. குட்டி காஷ்மீர் போல் மாறிய ஊட்டி!

முட்டுக்காடு மிதவை படகு உணவகத்தின் சிறப்புகள்:

மிதவை படகு உணவகம்
மிதவை படகு உணவகம் (ETV Bharat Tamil Nadu)
  • தமிழகத்தின் முதல் மிதவை படகு உணவகம் (Floating Restaurant) சென்னை முட்டுக்காடு பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
  • இரண்டு அடுக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதவை படகு உணவகம் 125 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்டுள்ளது.
  • 100 பேர் அமர்ந்து செல்லும் விதமாக, உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு தனியார் நிகழ்ச்சிகள், பிறந்தநாள், அலுவலகம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக நடன மேடைகள், நட்சத்திர விடுதி, வண்ண, வண்ண எல்.இ.டி விளக்குகள், டிஜிட்டல் லேசர் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலாபயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மேல்தளத்தில் நின்றவாறு இயற்கை காட்சிகளை ரசிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மிதவை படகு உணவகத்தில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட்டுள்ளது.
  • கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முட்டுக்காடு மிதவை உணவகம் தொடர்பான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிதவை படகு உணவகத்திற்கு இனி கேரளாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.