சென்னை:ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடும் போது, "சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் எனது கடைசி போட்டியாக இருக்கும்.
எனக்குள் இன்னும் ஒரு கிரிக்கெட்டர் இருக்கிறார். அதன் நான் உள்ளூர் போட்டிகளில்தான் காட்ட முடியும். இத்தனை நாள்கள் ஒத்துழைப்பு வழங்கிய பிசிசிஐக்கும், சக வீரர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்," என தெரிவித்தார்.
தாயகம் திரும்பிய அஸ்வின்:
ஓய்வு அறிவித்ததும். "நான் இப்போது கிளம்புகிறேன். ஆனால் மெல்போர்னில் நீங்கள் விளையாடுவதை நான் பார்ப்போன்" என சக வீரர்களிடம் கூறிவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பிய அஸ்வின், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து காரில் சென்னை நகரில் உள்ள அவரது இல்லத்திற்குப் புறப்பட்டு சென்றார். மேலும் ஓய்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரைவில் அது குறித்து பேசுகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சுழற்பந்து நாயகன்: