சண்டிகர்: 17வது ஐபிஎல் தொடரில், 33வது போட்டி சண்டிகரில் உள்ள முல்லான்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஆட்டத்தை துவக்கியது. ரபாடா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கிஷன் 8 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளாக விளாசினார். மறுபுறம், ரோகித் சர்மா சிக்சர்களாக விளாசினார். ரோகித் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாம் கரண் பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா, சூர்யகுமாருக்கு நல்ல கம்பெனி கொடுத்து பவுண்டரிகளாக விளாசினார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களுக்கு 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாம் கரண் பந்தில் அவுட்டானார்.
மறுமுனையில் திலக் வர்மா சிக்சர்களாக விளாசினார். கேப்டன் பாண்டியா 10 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட், வந்த வேகத்தில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தார். ஆனால், அவரும் ஹர்ஷல் படேல் பந்தில் 14 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஷெப்பேர்ட் 1 ரன்னில் அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் எடுத்தது.