பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில், மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தய பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக்ஸ் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
பாரீஸில் இன்று (ஆக.30) நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் 100 மீட்டர் தூரத்தை 14.21 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதில், 100 மீட்டரை 13.58 வினாடிகளில் கடந்து சீன வீராங்கனை சவு சியா (ZHOU Xia) தங்கம் வென்றார். மற்றொரு சீன விராங்கனை குவோ (GUO Qianqian) 13.74 வினாடிகளுடன் கடந்து 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து, 200மீ T35 பிரிவிலும் ப்ரீத்தி பால் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.