தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீராங்கனை நேத்ரா குமணன்.. பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து! - Nethra Kumanan

nethra kumanan: வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நேத்ரா குமணன்
NETHRA KUMANAN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 11:16 AM IST

சென்னை:பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது(Paris Olympics2024) ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் கடந்த ஏப்.16ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது.

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன் பாய்மர படகு போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார் இதில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவதற்கான 'Last Chance Regetta' தொடர் பிரான்ஸில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் ஒட்டு மொத்தமாக 67 புள்ளிகளைப் பெற்று 5வது இடம் பிடித்த நேத்ரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கும் 2வது போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்று இருந்தார் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன்.

இந்தநிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நேத்ராவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், Paris Olympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவருக்கு என் பாராட்டுகள். Tokyo Olympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"உலக செஸ் சாம்பியன் தொடருக்கான பயிற்சி எப்போது?" - கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details