நெல்லூர்: ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ், ஸ்வப்னா தம்பதியின் மகன் நயன் மவுரியா. அண்மையில் சென்னையில் நடைபெற்ற ரூபிக் கியூப் விளையாட்டு போட்டியில் சைக்கிள் ஓட்டியபடியே ரூபிக் கியூப் விளையாடி நயன் மவுரியா கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.
நயன் மவுரியாவின் குடும்பம் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். அங்குள்ள மாணவர்கள் ரூபிக் கியூப் விளையாடுவதை கண்டு அதில் ஆர்வம் கொண்ட நயன் மவுரியா, தானும் அதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார். இதனிடையே, ஸ்ரீனிவாஸ் - ஸ்வாப்னா தம்பதி கடந்த 2020ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் குடிபெயர்ந்தனர்.
நெல்லூரில் குடிபெயர்ந்த குடும்பம்:
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் சொந்தமாக கார்மெண்ட் தொடங்கிய ஸ்ரீனிவாஸ், அங்கேயே தனது குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கினார். இதனிடையே ரூபிக் கியூப் விளையாட்டின் மீதான நயன் மவுரியாவின் ஆர்வம் துளியும் குறையாததை கண்டு ஆச்சரியமடைந்த ஸ்வப்னா, தனது மகனுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கத் தொடங்கி உள்ளார்.
முதலில் சிறிய வகையிலான ரூபிக் கியூப்களில் பயிற்சி பெற்ற நயன் மவுரியா, தொடர்ந்து தாய் ஸ்வப்னா கொடுத்த 20 அடுக்கு வகையிலான ரூபிக் கியூப்பில் விளையாடத் தொடங்கி உள்ளார். அடுத்தடுத்து பயிற்சிகளை மேற்கொண்ட நயன் மவுரியா, ரூபிக் கியூப் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து வெற்றி வாகை சூடத் தொடங்கி உள்ளார்.
கின்னஸ் சாதனை:
இதனிடையே ரூபிக் கியூப் விளையாட்டில் சாதிக்க எண்ணிய நயன் மவுரியாவின் எண்ணத்தில் தோன்றியது தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டே ரூபிக் கியூப் விளையாடுவது. அதற்காக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட நயன் மவுரியா தற்போது கின்னஸ் புத்தக்கத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
வெறும் 59 விநாடிகளில் 271 அடுக்கு கொண்ட ரூபிக் கியூப் விளையாடி நயன் மவுரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனை நிர்வாகம் சார்பில் அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் நயன் மவுரியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. ரூபிக் கீயூப் தவிர்த்து கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு நயன் மவுரியா தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
இதையும் படிங்க:வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் அதிரடி! - India Won Bangladesh