ETV Bharat / state

ஸ்டாலினை சாடிய பாலகிருஷ்ணன்.. கொதித்து எழுந்த முரசொலி.. கூட்டணியில் களேபரம்! - CM STALIN VS CPIM BALAKRISHNAN

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருக்கிறதா என பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், குழப்பக்காரர்களுக்கு வக்கீலாக வேண்டாம் என முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.

கே. பாலகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின்
கே. பாலகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 12:55 PM IST

சென்னை: கூட்டணிக் கட்சிகளை தோழமைக் கட்சிகள் என்றே உரிமையோடு அழைத்து வரும் திமுக தரப்பிலிருந்து, காட்டமான பதில் ஒன்று வந்துள்ளது. தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், "சென்னையில் மாணவி ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்லை என்ற 'டிரெண்ட்' உருவாக்க சிலர் துடிக்கிறார்கள். அதற்காக போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக பாலகிருஷ்ணன் வக்கீலாக மாறுகிறார்?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அப்படி என்ன பேசிவிட்டார் கே.பாலகிருஷ்ணன்?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 3ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது" என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு சில கேள்விகளை முன்வைத்த அவர்,

  • "தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப் படுத்திவிட்டீர்களா நீங்கள்?
  • எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல் படுகிறது?
  • போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன?
  • ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா?
  • சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?" என கேள்விகளை அடுக்கினார்.

முதல் பக்கத்திலேயே பதிலளித்த முரசொலி:

முரசொலி
முரசொலி (Murasoli)

கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு சூட்டோடு சூடாக முகப்புப் பக்கத்திலேயே பதிலளித்துள்ள முரசொலி, சில பதில் கேள்விகளையும் முன்வைத்துள்ளது. "இது தோழமைக்கு இலக்கணம் அல்ல" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள முரசொலி, "தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்" என குற்றம் சாட்டியுள்ளது.

எதற்காக வீதியில் நின்று கேள்வி கேட்க வேண்டும்?

'தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் கே.பாலகிருஷ்ணன், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே நின்று கொண்டுதான் பேசியிருக்கிறார். அவரை பேசவிடாமல் தடுத்தார்களா? என முரசொலி கேள்வி எழுப்பியிருக்கிறது. "முதலமைச்சரை எப்போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கும் அவர், எதற்காக வீதியில் போய் நின்று இப்படி கேள்வி எழுப்ப வேண்டும்?" எனவும் முரசொலி வினவியிருக்கிறது.

எது ஒரிஜினல் கே.பி.?

புதிய பொருளாதாரக் கொள்கை, மதவெறி, ஆளுநருக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், சாதிய ஒடுக்கு முறை, தீண்டாமைக் கொடுமைகள் உள்ளிட்ட போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தியதாக பாலகிருஷ்ணன் சொன்னதைக் குறிப்பிட்டுள்ள முரசொலி, பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பாலகிருஷ்ணன் எனவும் கேள்வி எழுப்புகிறது.

எதிரிக்கட்சியாக நடந்து கொள்வதா?

"எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும் மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல." எனவும், "இவை தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது" எனவும் முரசொலி கூறியிருக்கிறது.

முரசொலியில் வெளியான செய்தி
முரசொலியில் வெளியான செய்தி (Murasoli)

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு அரசியல் களம் தயாராகி வரும் நிலையில், கூட்டணிக்கு அடிபோடுபவர்களின் கவனமெல்லாம் திமுக கூட்டணி கட்சிகள் பக்கம்தான் இருக்கிறது. ஏற்கெனவே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என வி.சி.க.வில் சலசலப்பு ஏற்பட்டு அமைதி திரும்பிய நிலையில், தற்போது தோழமைக்கட்சியாக இருந்து வரும் மார்க்சிஸ்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்திருப்பது, கூட்டணியில் புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.