பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதிச் சுற்றில் விளையாடிய நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டி இன்று (ஆக.6) நடைபெற்றது. இதில், இந்திய தங்க மகனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். மொத்தம் மூன்று முயற்சிகள் ஒரு வீரருக்கு வழங்கப்படும் நிலையில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது தொடக்க முயற்சியிலேயே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அபாரமாக வீசிய நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷாத் நதீமும் தனது முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அர்ஷாத் நதீம் முதல் முயுற்சியில் 86.59 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.
இதன் மூலம் நீரஜ் சோப்ரா மட்டும் அர்ஷாத் நதீம் பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். முன்னதாக தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரத்திற்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து இருந்தாலும் தனது வாழ்நாள் சாதனையான 89.94 மீட்டர் தூரத்தை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"அப்பா ஏற்கனவே வெண்கலம் இருக்கு.. இந்த முறை தங்கம் வேணும்"- ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் குழந்தைகள் கட்டளை! - paris olympic 2024