தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக்கில் 3வது பதக்கம் வெல்லும் முனைப்பில் மனு பாகெர்! தங்கம் வெல்வாரா? - Paris Olympics 2024

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 5:40 PM IST

Updated : Aug 2, 2024, 6:14 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகெர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் நாட்டுக்காக மூன்றாவது பதக்கத்தை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Manu Bhaker (AP)

பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 25 மீட்டர் பிஸ்டஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாகெர் மற்றும் ஈஷா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்கம் முதலே சொதப்பி வந்த ஈஷா சிங் இறுதிச் சுற்றில் 15வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை கோட்டைவிட்டார். தரவரிசையில் டாப் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறுவர். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர் சிறப்பாக ஷாட்டுகளால் துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தார்.

இறுதியில் 590 புள்ளிகள் பெற்ற மனு பாகெர், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகெர் தற்போது 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். இதன் மூலம் அவர் நாட்டுக்காக 3வது பதக்கத்தை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தை கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்! - Paris Olympics 2024

Last Updated : Aug 2, 2024, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details