ஐதராபாத்: இந்தியாவில் அதிகளவிலான மக்கள் விரும்பப் கூடிய விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகிறது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் ஒன்றாக பிசிசிஐ உள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பெரும் செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். விளம்பரம், பிராண்ட் எண்டோர்ஸ்மென்ட், லீக் கிரிக்கெட் என பல்வேறு வகைகளில் இந்திய வீரர்கள் தங்கள் வருவாயை ஈட்டி வருகின்றனர்.
ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கார்கள், வித்விதமான ஆடை அணிகலன்கள் என செலவச் செழிப்பில் இந்திய வீரர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையை களித்து வருகின்றனர். இன்னும் சில வீரர்கள் ஒரு படி மேலே சென்று சொந்தமாக விமானம் மற்றும் பிரைவேட் ஜெட் வைத்து உள்ளனர்.
அப்படி தங்களுக்கு என பிரத்யேகமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கபில் தேவ்:
கிரிக்கெட் உலகில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் தான் கபில் தேவ். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. சுதந்திர இந்தியாவில் பிரைவேட் ஜெட் வாங்கிய முதல் கிரிக்கெட் வீரர் என்றால் அது கபில் தேவ். 110 கோடி ரூபாய் மதிப்பிலான பிரைவேட் ஜெட்டை கபில தேவ் வைத்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்:
கிரிக்கெட்டின் கடவுள், ஜாம்பவான் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கரும் தனக்கென சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். ஏறத்தாழ 250 கோடி ரூபாய் மதிப்பிலான பிரைவேட் ஜெட்டை சச்சின் தெண்டுல்கர் வைத்துள்ளார்.