ஜெத்தா:அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
டெல்லி அணியில் நடராஜன்:முக்கிய ஆட்டக்காரர்களை ஏலத்தை எடுக்கும் போது அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை எடுக்க டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு தொடங்கிய ஏலம் 10 கோடி தாண்டியது. இதனால் ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏலம் கேட்பதிலிருந்து விலகின, இறுதியில் ரூ.10.75 கோடிக்கு, நடராஜனை ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய நடராஜன், முதல் முறையாக டெல்லி அணிக்காக விளையாட உள்ளார்.