ETV Bharat / state

"அமைதியாக அவரவர் வேலையை பார்த்தால் நல்லது" - ஓபிஎஸ்-க்கு செங்கோட்டையன் பதிலடி! - SENGOTTAIYAN

அதிமுக, பாஜக மறைமுக கூட்டணி குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது என்றும் நான் ஒரு சாதாரண தொண்டர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 10:51 PM IST

திருச்சி: அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்று கிடையாது. அமைதியாக அவரவர் வேலையை பார்த்தால் நல்லது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்ளை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகிய மூவரை கட்சியில் ஒன்றிணைப்பதில் ஈடுபட்டு உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், '' ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் எங்கும் பேசவில்லை. அந்த வார்த்தையை எங்கும் பயன்படுத்தவில்லை. புதிது புதிதாக கேள்வி எழுப்புகிறீர்கள். நான் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளேன், மாதம் ஒருமுறை வருவேன்'' என தெரிவித்தார்.

அந்தியூர் தோல்வி பற்றின கேள்விக்கு, ''அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றியை பெற்று உள்ளோம். சில துரோகிகளால் அங்கு தோல்வி ஏற்பட்டது எனக் கூறினேன்''.

பாஜகவில் இணைந்தால் நல்லது என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, ''அது பற்றி அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். மூத்த தலைவராக இருந்தாலும் எதை வேண்டுமானாலும் சொல்ல முடியாது. அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்று கிடையாது. அமைதியாக அவரவர் வேலையை பார்த்தால் நல்லது''.

இதையும் படிங்க: 'தேவதாசிய சங்காரம்': வியப்பில் ஆழ்த்தும் கல்லூரி மாணவிகளின் எழுச்சி நாடகம்!

அதிமுக சின்னம் விவகாரம் குறித்த கேள்விக்கு, ''இரட்டை இலை விவகாரம் குறித்து சிவி சண்முகம் பதிலளிப்பார். அவர்தான் வழக்கறிஞர், சட்டமன்றத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருக்கிறார். அவர்தான் அது குறித்து பதில் அளித்து வருகிறார். அது குறித்து நாங்கள் யாரும் பதில் கூறுவதில்லை''.

அதிமுக, பாஜக மறைமுக கூட்டணிக்கு இந்த நிகழ்வுகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, ''அதனை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். நான் ஒரு சாதாரண தொண்டன்''.

ஈபிஎஸ் பாராட்டு விழா புறக்கணிப்பு சர்ச்சை குறித்த கேள்விக்கு, விவசாயிகள் என்னை பார்க்க வந்த போது அழைப்பிதழ் கொடுத்தார்கள். அதில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்ற ஆதங்கத்தை கூறினேன். அனைவரும் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறினர்கள். நான் புறக்கணிக்கவில்லை, கலந்து கொள்ளவில்லை என்று கூறினேன்'' என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.