ETV Bharat / sports

ஆடுவாரா ரிஷப் பந்த்? சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே காயம்... வலியால் துடித்த வீடியோ... ரசிகர்கள் கலக்கம்! - RISHABH PANT INJURY

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க துபாய் சென்றுள்ள இந்திய அணி வலை பயிற்சி மேற்கொண்டபோது ரிஷப் பந்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.

ரிஷப் பந்த் (கோப்புப்படம்)
ரிஷப் பந்த் (கோப்புப்படம்) (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 4:54 PM IST

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி துபாய்க்கு சென்றது. அங்குள்ள மைதானத்தில் இந்திய அணி முதல் வலை பயிற்சியில் ஈடுபட்டபோது ரிஷப் பந்துக்கு முழங்காலில் அடிபட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர் தொடக்க போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி கடந்த சனிக்கிழமை துபாய் சென்றது. துபாய் வந்திறங்கிய இந்திய வீரர்களுக்கு அங்குள்ள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து இந்திய அணியினர் அந்நாட்டு மைதானத்தின் சூழலை பழகிக்கொள்ள வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், ஆட்டக்காரருமான ரிஷப் பந்த் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா வீசிய பந்து முழங்காலில் பட ரிஷப் பந்த் மைதானத்தில் விழுந்து வலியால் துடித்தார். உடனே மருத்துவ குழுவினர் அவரை சோதித்துவிட்டு தேவையான சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து ரிஷப் பந்த் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் மைதானத்தின் வெளியே பேருந்தில் செல்ல வந்தபோது ரிஷப் பந்த் நொண்டிக்கொண்டே வந்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள் முழு விவரம்!

தற்போது சிறப்பான பார்மில் உள்ள ரிஷப் பந்த் இந்த டிராபியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக விக்கட் கீப்பராக உள்ள ரிஷப் பந்தின் தேவை இந்திய அணிக்கு மிக முக்கியம். கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில் இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பயிற்சியின்போதே ரிஷப் பந்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. போட்டியின் தொடக்க ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறும். இந்தியா அணி நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.