ETV Bharat / sports

TNPL Auction 2025: உள்ளூர் வீரர்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி.. அதிக விலைக்கு ஏலம் போன 2 வீரர்! - TNPL AUCTION 2025

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) ஏலத்தில், உள்ளூர் வீரர்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. இதில், சிறப்பாக விளையாடிய 691 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

TNPL Auction 2025
TNPL Auction 2025 (TNPL)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2025, 1:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் நடைபெறும் கிரிக்கெட் லீக் தொடரான தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) சீசன் 9-க்கான (2025) ஏலம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில், இந்திய அணி மற்றும் ரஞ்சி போட்டி உள்ளிட்ட உள்ளூர் போட்டியில், சிறப்பாக விளையாடிய 691 முக்கிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

டிஎன்பிஎல் ஏலம்:

மேலும், ஏலத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் ட்ராகன், ஐடீரீம் திருப்பூர் தமிழன், லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றது. அனைத்து அணிகளுக்கும் 80 லட்சம் ரூபாய் ஏல தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஐந்து வீரர்கள் தக்கவைப்பு:

ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படிருந்தது. அந்த 5 வீரர்களில் 4 வீரர்கள் அனுபவ வீரர்களாக தக்கவைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் 4 அனுபவ வீரர்களுடன் 5 வீரர்களை தக்கவைத்தனர். அதனைத் தொடர்ந்து, மற்ற வீரர்களுக்கான ஏலம் நடைப்பெற்றது.

போட்டி போட்டு ஏலம் எடுத்த அணிகள்:

அந்த வகையில், நேற்று (பிப்.15) நடைபெற்ற ஏலத்தில் ABCD என நான்கு பிரிவுகளாக வீரர்களை பிரித்து ஏலம் நடைபெற்றது. அதில் A பிரிவில் 2 எலைட் வீரர்களும், B பிரிவில் 28 அனுபவ வீரர்களும், C பிரிவில் 16 வளர்ந்துவரும் வீரர்களும், D பிரிவில் 645 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இதில், ஒவ்வொரு அணியும் D பிரிவில் இருந்து 20 வீரர்கள் வரை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஏலத்தில் சில வீரர்கள் நட்சத்திர வீரர்களை விட அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்
ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர் (TNPL)

அதில் ஆலரவுண்டர் முகமதுவை சேலம் அணி, இந்த சீசனில் அதிக ஏல தொகையான 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக நட்சத்திர வீரர் விஜய் சங்கரை ஏலத்தில் எடுப்பதற்காக சேப்பாக்கம் கில்லிஸ், மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிறுவியது. இதில் சேப்பாக்கம் கில்லிஸ் அணி விஜய் சங்கரை இந்த சீசனின் இரண்டாவது அதிக ஏல தொகையான ரூ.18 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

ரூ.18 லட்சத்திற்கு ஏலம் போன விஜய் சங்கர்
ரூ.18 லட்சத்திற்கு ஏலம் போன விஜய் சங்கர் (TNPL)

அடுத்ததாக ரூ.10.80 லட்சத்திற்கு ஆல்ரவுண்டர் ஸ்வப்னில் சிங்கை ஏலத்தில் எடுத்தது. திருச்சி கிராண்ட் சோழா அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை ரூ.6 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அதே அணியில் ஆல்ரவுண்டரான முகிலேஷை ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், விக்கெட் கீப்பர் சுரேஷ்குமாரை ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.

ரூ.9.8 லட்சத்திற்கு ஏலம் போன பெரியசாமி
ரூ.9.8 லட்சத்திற்கு ஏலம் போன பெரியசாமி (TNPL)
ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போன வாசிங்டன் சுந்தர்
ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போன வாசிங்டன் சுந்தர் (TNPL)

சம்பவம் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி:

இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆல்ரவுண்டர் முகமதுவை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுத்தனர். முகமதுவை மற்ற அணிகளும் ஏலம் கேட்க முயன்றதால் கடுமையான போட்டியின் இடையே சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முகமதுவை ஏலத்தில் எடுத்தது. அதேபோல ஆல்ரவுண்டர்களான ஹரி நிஷாந்தை ரூ.12 லட்சத்துக்கும், நிதீஷ் ராஜகோபாலை ரூ.10 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.

அதிக விலைக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள்
அதிக விலைக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள் (TNPL)

இதையும் படிங்க: சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி: விறுவிறுப்பான ஆட்ட களம்!

மற்ற அணிகள் நிலவரம்:

  • அதேபோல், மதுரை பேந்தர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் கார்த்திக் ரூ.9.20 லட்சத்துக்கும், விக்கெட் கீப்பர் ராம் அரவிந்த் ரூ8.10 லட்சத்துக்கும், பேட்ஸ்மேன் கணேஷ் ரூ.8.05 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
  • நெல்லை ராயல் கிங் அணியில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் முகமது கானை ரூ.7.05 லட்சத்துக்கும், பந்து வீச்சாளர் அஜய் கிருஷ்ணனை ரூ.4.4 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.
  • லைகா கோவை கிங்ஸ் அணியில் அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பர் லோகேஷ்வர் ரூ,10 லட்சத்துக்கும், மேட்ஸ்மேன் ஆண்ட்ரே சித்தார்த் ரூ.8.40 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
  • ஐடீரீம் திருப்பூர் தமிழாஸ் அணியில் அதிகப்பட்சமாக பந்துவீச்சாளர் சிலம்பரசன் ரூ.9 லட்சத்துக்கும், பேட்ஸ்மேன் பிரதோஷ் ரஞ்சன் பால் ரூ.4.40 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
  • திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியில் அதிகப்பட்சமாக ஆல்ரவுண்டர் ஹன்னி ரூ.11.70 லட்சத்துக்கும், பந்துவீச்சாளர் பெரியசாமியை ரூ.9.80 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வீரர்களின் ஏலத்திலேயே ஹைப் ஏறியுள்ள நிலையில், ரசிகர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டிக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பையை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.