ETV Bharat / sports

ஐபிஎல் 2025 அட்டவணை வெளியானது... மார்ச் 22 இல் முதல் போட்டி; மே 25 இறுதிப் போட்டி - முழு விவரம் இதோ! - IPL 2025 SCHEDULE

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மோதுகிறது.

ஐபிஎல் கோப்பை - கோப்புப்படம்
ஐபிஎல் கோப்பை - கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2025, 5:56 PM IST

ஹைதராபாத்: 18 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி துவங்கவுள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

அன்றைய தினம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியும், ஆர்சிபி அணியும் மோத உள்ளன. லீக் சுற்றுப் போட்டிகள் தொடங்கி இறுதிப் போட்டி வரை மொத்தம் 74 போட்டிகளை கொண்ட இத்தொடரின் இறுதி ஆட்டம் மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே போட்டி: இந்தத் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. இப்போட்டி மார்ச் 23 ஆம் தேதி பெறவுள்ளது. அதே நாளில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இத்தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் வார இறுதி நாட்களில், ஒரு தினத்தில் இரண்டு போட்டிகள் என்ற கணக்கில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி (Qualifier 1) மே மாதம் 20 ஆம் தேதி, ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி (Qualifier 2) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மே மாதம் 23 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தகுதி நீக்க சுற்றுப் போட்டி (Eliminator) மே 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

குரூப் ஏ, பி அணிகள் விவரம்: மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இவற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), பஞ்சாப் கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் (GT), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), மும்பை இந்தியன்ஸ் (MI), டெல்லி கேப்பிடல்ஸ் (DC), லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றுப் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள பிற அணிகளுடன் ஒருமுறையும், மற்றொரு பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும் மோத உள்ளன.

போட்டி நடைபெறும் இடங்கள்: கொல்கத்தா, சென்னை , ஹைதராபாத், விசாகப்பட்டினம், தர்மசாலா உள்ளிட்ட 13 இடங்களில் ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெற உள்ளன.

முன்னதாக இந்த தொடருக்கான ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை அதிகபட்சமாக 27 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்து வைத்துள்ளது லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. அவருக்கு அடுத்ததாக ஷ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.