ஜெய்பூர்: 2024 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இத்தொடரின் 9வது போட்டி இன்று ஜெய்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2வது இடத்தில் உள்ளது. அதேநேரம், டெல்லி அணி விளையாடிய கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதனால் இந்த போட்டியில் டெல்லி அணி வென்று தனது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குகிறது.
இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா மற்றும் ஷாய் ஹோப் ஆகியோருக்கு பதிலாக அன்ரிச் நார்ட்ஜே மற்றும் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.