பெனானி:ஐசிசி சார்பில் U19 உலகக்கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அதன்படி, இன்று மதியம் 1.30 மணி அளவில் பெனானியில் இறுதி ஆட்டம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஷ்வின், தனது யூடியூப் சேனலில் ஜூனியர் அணி கேப்டன் உதய் சஹாரன்ஸ் பற்றி பதிவு செய்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது. "உதய்யை அனைவரும் 'ஃபைண்ட் ஆஃப் தி டோர்னமெண்ட்' என்றுதான் அழைக்கின்றனர். சீனியர் அணிக்கு சிறந்த ஃபினிஷராக செயல்படுவார்.
இந்த போட்டியில் இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்த முதல் கேப்டன். இது ரன்களைப் பற்றியது அல்ல, போட்டியைப் பற்றியது. உதய் சஹாரனின் வெற்றித் திறன் என்னை கவர்ந்ததற்கு காரணம், அவருடைய நிதானம்தான். உதய் சஹாரன் மிகவும் உறுதியாக இருக்கிறான் எனவும், அமைதியாகவும், தன்னம்பிக்கை உடையவனாக திகழ்கிறான் எனக் கூறினார்.
ஜூனியர் உலகக்கோப்பையில், மொத்தம் 389 ரன்கள் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்களை விளாசி அதிக ரன்களை குவித்துள்ளார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், உதய் 81 ரன்கள் எடுத்ததால்தான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.