ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டி நேற்று முன்தினம் (மே 18) நடந்து முடிந்திருக்கிறது. வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாதித்திருக்கிறது. கடந்த ஏப்.21ஆம் தேதி பெங்களூரு அணி 8 போட்டிகள் விளையாடி வெறும் 1 போட்டி மட்டுமே வென்றிருந்தது.
அவ்வளவுதான் பெங்களூரு அணி ஐபிஎல் சீசனிலேயே இதுதான் அவர்களது மோசமான சீசன் என விமர்சிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று காட்டி இருக்கிறது. குறிப்பாக இறுதி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நிலையில், அசத்தலான ஓவரை வீசி பெங்களூரு அணியின் வெற்றிக்கு யாஷ் தயாள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
போட்டி முடிந்த பின்பு கேப்டன் டு பிளெசிஸ் கூட, "இந்த ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு சமர்ப்பிக்கிறேன்" என கூறியிருந்தார். கடைசி ஓவரை வீசிய யாஷ் தயாளுக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் பாராட்டித்தள்ளினர்.
இந்த நிலையில், அவரை தொடர்பு கொண்டு பேசினோம், "உண்மையில் எனது கடின உழைப்பே காரணம். அதற்கு முக்கிய காரணம் எனது பெற்றோர். பள்ளிப்படிப்பு முதல் அனைத்திலும் என்னை கவனித்து கொண்டனர். குறிப்பாக விளையாட்டின் மீதான ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொண்டது.