அகமதாபாத்:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், இன்று நடைபெறும் 59வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெர்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இது குறித்து ருதுராஜ் கூறுகையில் "இது நல்ல விக்கெட்டாக தெரிகிறது. சேஸிங் மைதானம்.
அதனால் நாங்கள் சேஸிங்கை எதிர்பார்க்கிறோம்" என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்ய குஜராத் அணி வீரர்கள் தயாரகி வருகின்றன. இதற்கு முன்னதாக நடைபெற்ற 11 போட்டிகளில் 10 முறை டாஸ் தோற்ற ருதுராஜ் இந்த போட்டியில் டாஸ் வென்றள்ளார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 6 வெற்றி 4 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.
இதனால் சென்னை அணி அடுத்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், சுலபமாக பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும். அதேபோல் 2ல் போட்டிகளில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டும். குஜராத் அணியைப் பொறுத்தவரையில், 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.