ஐதராபாத்:சையது முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் வீரர் உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் சாதனையை உர்வில் படேல் படைத்துள்ளார்.
இதற்கு முன் எஸ்டோனியா வீரர் சஹில் சவுகான் 27 பந்துகளில் சதம் விளாசி, 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றி அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். உர்வில் படேலை தொடர்ந்து அதிவேக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரிஷப் பன்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தூரில் இன்று (நவ.27) காலை 9 மணிக்கு நடைபெற்ற குருப் பி பிரிவு லீக் ஆட்டத்தில் திரிபுரா - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
திரிபுரா அணியில் அதிகபட்ச ஸ்ரீதம் பவுல் 57 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 10.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் விக்கெட் கீப்பர் உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
மொத்தம் 35 பந்துகளை எதிர்கொண்ட உர்வில் படேல் அதில் 7 பவுண்டரி, 12 சிக்சர்களுடம் 113 ரன்கள் விளாசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்த உர்வில் படேல், அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்காத நிலையில் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள்: