ஹைதராபாத்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்ததால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது கெளதம் கம்பீர் இன்று (ஜூலை 9) நியமிக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கெளதம் கம்பீரை வரவேற்கிறேன். இந்த காலத்தில் கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கெளதம் கம்பீர் தனது கிரிக்கெட் பயணத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.