பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் போல் வால்ட் விளையாட்டு மூலம் பிரான்ஸ் வீரர் அந்தோனி அம்மிரதி (Anthony Ammirati) உலக அறிந்த நபராக காணப்படுகிறார். ஆடவர் போல் வால்ட் தகுதிச் சுற்றில் அவர் தகுதியிழந்து வெளியேறிய வீடியோ தான் அதற்கு காரணம். ஒரேயொரு வீடியோ மூலம் உலக அறியப்படும் நபராக மாறி உள்ளார் அந்தோனி அம்மிரதி.
கடந்த சனிக்கிழமை (ஆக.3) நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் போல் வால்ட் விளையாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு. நீண்ட குச்சியின் மூலம் 5 அடி உயரத்திற்கு அதிகமான உயரத்தில் உள்ள வெர்ட்டிக்கல் பாரை தாண்டி வீரர்கள் விளையாடினர். அதில் 5.70 மீட்டர் உயரத்தை தாண்டு முயற்சியில் பிரான்ஸ் வீரர் அந்தோனி அம்மிரதி கலந்து கொண்டார்.
ஏற்கனவே இரண்டு முயற்சிகளில் பவுல் செய்த அவர், கடைசி முயற்சியில் எப்படியாவது 5.70 மீட்டர் உயரத்தை தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சித்தார். இந்த முயற்சியில் அவரது கால் லேசாக பார் மீது உரசிய போதிலும், விழவில்லை. ஆனால் தாவுவதை நிறைவு செய்த போது அவரது ஆணுறுப்பு பார் மீது வலுவாக உரசியதால் பார் கீழே விழுந்தது. இதனால் மீண்டும் ஒரு பவுல் முயற்சியை நிறைவு செய்யாததால் அந்தோனி அம்மிரிதி அடுத்து சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.