தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

nz won t20 world cup: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி! உலகக்கோப்பையை வென்ற நியூசிலாந்து!

தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதன்முறையாக டி20 மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து அணி.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

நியூசிலாந்து மகளிர் அணி
நியூசிலாந்து மகளிர் அணி (Credit - ANI)

துபாய்:9 ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுசி பேட் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய அமெலியா கெர் சுசி பேட்வுடன் இனைந்து நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

இதில் 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் விளாசிய சுசி பேட் மலாபா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்ன களமிறங்கிய தென்னாப்பிரிக்க கேப்டன் சோஃபி டெவின் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்த வந்த ப்ரூக் ஹாலிடே அதிரடியாக விளையாடினார்.

இதையும் படிங்க:2025 ஐபிஎல் தொடரிலும் CSK-வில் தோனி? - சிஇஓ விஸ்வநாதன் கூறியது என்ன?

28 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் விளாசி இருந்த நிலையில் பெவிலியன் திரும்பினர்.மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா கெர் 38 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 43 ரன்கள் விளாசி இருந்த நிலையில் மலாபா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்துள்ள நியூசிலாந்து அணி. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் மலாபா 2 விக்கெட்டுகளும், நாடின் டி கிளர்க், அயபோங்க மற்றும் சோலி ட்ரையான் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து களமிறங்கிட தென்னாப்பிரிக்கா அணி ரன்களை சேர்க்க தவறயது மட்டும் அல்லாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

20 ஓவர்கள் முழுவதும் விளையாடிய 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பை வென்று அசத்தியுள்ளது. இந்த தோல்வியின் மூலம் தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு மீண்டும் நனவாகமல் போனாது.

ABOUT THE AUTHOR

...view details