திருவாரூர்:திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 27வது பரிசளிப்பு விழா திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. அந்த பரிசளிப்பு விழா திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அது குறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எங்களுக்கும் அவர் சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும் நம்பிக்கையும் இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸ் (Uncapped Players) தோனிக்காக கொண்டு வரவில்லை. இது முதல் வருடத்தில் இருந்தே இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸில் ஆறு முதல் ஏழு வீரர்கள் வரை அணிக்குள் வர இருக்கிறார்கள்.