தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சந்தேஷ் -ஜெகதீசன் அதிரடி பார்ட்னர்ஷிப்.. திருச்சியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்! - TNPL 2024 - TNPL 2024

TGC vs CSG HIGHLIGHTS: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது.

இரு அணி வீரர்கள்
இரு அணி வீரர்கள் (Credit - TNPL)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 7:30 AM IST

திருநெல்வேலி:8வது டிஎன்பில் கிரிக்கெட் தொடர் சேலம், மற்றும் கோவையைத் தொடர்ந்து தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் டாப் 4 இடத்தை பிடிக்க அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த தொடரின் 21வது லீக் போட்டியில் ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோழாஸ் - பாபா அப்ரஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்ஸை எதிர் கொண்டது. திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் சந்தேஷ் குமார் 56 ரன்களுக்கும், ஜெகதீசன் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் அப்ரஜித் 2 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய பெராரியோ (30 ரன்கள்), பிரதோஷ் ரஞ்சன் பால் (29 ரன்கள்) மற்றும் அபிஷேக் தன்வார் (26 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

திருச்சி அணி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளையும், டேவிட்சன் மற்றும் வினோத் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திருச்சி அணி.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக வசிம் அகமது 48 ரன்களும், ராஜ்குமார் 39 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய ஜாபர் ஜமால் 52 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சேப்பாக் அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டுகளையும், பெரியசாமி, சிலம்பரசன் மற்றும் அபிஷேக் தன்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தி வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: பாய்மரப் படகு போட்டியில் சாதிக்க காத்திருக்கும் தமிழக வீரர்கள் நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன்; கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details