சென்னை:சென்னை உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருந்த பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணியும், புனேரி பல்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 10-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெங்களூரு அணியின் ஜான் சந்திராவும், புனேரி அணியின் அன்கூர் பட்டாச்சார்ஜியும் மோதினர். இதில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று புனேரி அணியின் புள்ளி கணக்கைத் தொடங்கினார் அன்கூர்.
இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் சரிவை சந்தித்தது புனே. மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ராவும் - ஹய்கா முகர்ஜியும் மோதினர். இதில் பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் பெங்களூரு அணியின் ரோபல்ஸ் - மணிகாவும் இணை, புனே அணியின் அனிர்பன்- பஜோர் இணையை எதிர்கொண்டது. இதன் முடிவில் 2-1 கணக்கில் ரோபல்ஸ் - மணிகா இணை பெற்றது.