ஐதராபாத்:அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் வைத்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்த தேவையான அனைத்து பணிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதே அளவுக்கு இந்திய அணியை பாகிஸ்தான் மண்ணில் விளையாட வைக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தங்கள் தரப்பில் ஆட்சேபனை இல்லை என முன்னர் பிசிசிஐ தெரிவித்த போதும், இது குறித்து மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறப்பட்டது.
அட்டவணையில் பிரச்சினை:
இந்நிலையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி அங்கு பயணிக்காது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில், பிசிசிஐ தரப்பில் வாய்வழிக் கருத்தாக தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ தனது முடிவை தெரிவித்து இருப்பது பிரச்சினயை கிளப்பி உள்ளது.
ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர். கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.
8 ஆண்டுகள் கழித்து: