ETV Bharat / state

'அந்த சார் யார் என்று தெரியும் போது திமுக ஆட்சியே ஆட்டம் காணும்' - முன்னாள் அமைச்சர்! - WHO IS THAT SIR ISSUE

யார் அந்த சார் என்பது தெரியும் போது இந்த ஆட்சியே ஆட்டம் காணும் என்பதால் தான் திமுக ஆடிப் போய் உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பு
கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2025, 1:56 PM IST

Updated : Jan 8, 2025, 2:11 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடம்பூர் சிதம்பபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டிக்கும் வகையில் 'யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது.

இதனை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பேசுகையில், '' அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை தமிழநாடு அரசு சரியாக கையாளவில்லை என்று நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி‌ உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

'யார் அந்த சார்? என்று கேட்டதும் இந்த அரசுக்கு அச்சம், பயம், பதட்டம் ஏற்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, ஆளுநரைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்துகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடும் திமுக, தங்களது 40 எம்பிக்களை வைத்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு அல்லது பிரதமர் இல்லம் முன்பு போராட வேண்டியது தானே?

இதையும் படிங்க: அண்ணா நகர் சிறுமி வழக்கு: அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது!

டெல்லியில் போராடாமல் தமிழ்நாட்டில் போராடி என்ன பயன்? அதிமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் நாங்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டோம். ஆனால், திமுக போராட்டத்திற்கு காவல்துறை எப்படி அனுமதி அளித்தது? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்க அரசு முயற்சி செய்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும்போது ஏன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று சொல்லக்கூடிய திராணி, தெம்பு, தைரியம் இல்லை? ஆகவே, பாஜக திமுக இடையே தான் கள்ள உறவு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்ப்பது போல காட்டும் திமுக டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை பவ்யமாக சந்தித்து இணக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 'யார் அந்த சார்? என்பது தெரியும் வரை பிரச்னை ஓயாது. 'யார் அந்த சார்? என்பது தெரியும் போது இந்த ஆட்சியே ஆட்டம் காணும் என்பதால் தான் திமுக ஆடிப் போய் உள்ளது'' என்றார்.

Last Updated : Jan 8, 2025, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.