பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ் ஓட்டப் பந்தையத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 11வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் 2025ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அவர் பெற்றார்.
ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்ட ஸ்டீபில்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் பந்தைய தூரத்தை 8:14:43 நிமிடங்களில் கடந்து 11வது இடத்தை பிடித்தார். முன்னதாக இறுதிப் போட்டிக்கான இரண்டாவது வாய்ப்பில் கலந்து கொண்ட அவினாஷ் சேபிள், 8:15:43 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்து பதக்க போட்டிக்கான வாய்ப்பை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இறுதிச் சுற்றில் குறிப்பிட்ட தூரத்திற்குள் பந்தைய தூரத்தை கடக்க முடியாமல் தோல்வி அடைந்தார். தகுதி சுற்றுகளின் அடிப்படையில் பிரிவு வாரியாக டாப் 5 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதிப் போட்டியில் களம் கண்டனர். மொத்தம் 15 வீரர்கள் இறுதிப் போட்டியில் விளையாடிய நிலையில் அதில், அவினாஷ் சேபிள் 11வது இடத்தை பிடித்தார்.
மொராக்கோ நாட்டை சேர்ந்த சௌபியான் எல் பக்காலி பந்தைய தூரத்தை 8:06.05 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார், அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கென்னத் ரூக்ஸ் 8:06.41 நிமிடங்களிலும், கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட் 8:06.47 நிமிடங்களிலும் முறையே பந்தைய தூரத்தை கடந்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
அதேநேரம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவினாஷ் சேபிள் பெற்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 8:14:18 நிமிடங்களில் ஒலிம்பிக் போட்டியில் பந்தைய தூரத்தை கடந்து இருக்க வேண்டும் என்ற நிலையில் அதற்கு முன்பாகவே அவினாஷ் சேபிள் கடந்து உலக சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அவினாஷ் சேபிள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதம் மூலம் நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் இறுதிப் போட்டியில் 11வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை நழுவவிட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:தங்கையால் சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல்! நாடு திரும்ப மத்திய அரசு அதிரடி உத்தரவு! - Paris Olympics 2024