தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவுக்கு ஆட்டம் காட்ட துடிக்கும் ஆஸ்திரேலியா.. மூன்று முகம் பார்முலா ஒர்க்காகுமா? - AUSTRALIA TEST SQUAD

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முதல் முறையாக 3 புதிய முகங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Representative Image (PTI)

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 9:20 AM IST

ஐதராபாத்:சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதை தொடர்ந்து இந்தியா, இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி முதல் துவங்க உள்ளன.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த உத்தேச அணியில் மூன்று வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மூவரில் இருவருக்கு இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி சரியான துவக்க வீரர் இன்றி தவித்து வருகிறது. டேவிட் வார்னர் ஓய்வுக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக சில ஆட்டங்களில் விளையாடினார். ஆனால், அவரால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. இந்த நிலையில் உஸ்மான் கவாஜா உடன் துவக்க வீரராக சவுத் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நாதன் மெக் ஸ்வீனி களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாதன் மெக் ஸ்வீனிக்கு ஆஸ்திரேலிய அணியில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜோஷ் இங்லிஸ்க்கு யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஸ்காட் போலண்ட் என்ற இளம் வீரர் ஆஸ்திரேலிய அணியில் மாற்று வேகப்பந்துவீச்சாளராக இணைந்துள்ளார்.

இந்த மூன்று புதிய வீரர்களைத் தவிர்த்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் வழக்கம் போல் இடம் பெற்று உள்ளனர். சுழற்பந்து வீச்சில் நாதன் லயோனுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் வழக்கம் போல் அணியில் இடம் பெற்று உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய உத்தேச அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

இதையும் படிங்க:விட்ட விடுல உடனே ஆஸ்திரேலியா கிளம்பும் ரோகித்! முதல் டெஸ்ட்ல விளையாடுவாரா?

ABOUT THE AUTHOR

...view details