தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்: எப்போது.. எப்படி பார்ப்பது? முழு விபரம்! - INDIA VS SOUTH AFRICA T20I SCHEDULE

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில், எப்போது போட்டி நடக்கிறது, எவ்வாறு போட்டிகளை பார்க்க முடியும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Indian Team Players (@X)

By ETV Bharat Sports Team

Published : Nov 5, 2024, 9:48 AM IST

ஐதராபாத்:இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற உள்ளன? போட்டி நேரம், எந்த சேனல் மற்றும் மொபைல் செயலியில் எப்படி போட்டிகளை நேரலையில் பார்க்கலாம்? உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியின் கீழ் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் டி20 போட்டிகள் துவங்க உள்ளன. இதற்காக தென் ஆப்பிரிக்க பறந்து உள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டி20 தொடர் அட்டவணை:

  • நவம்பர் 8 - முதல் போட்டி - டர்பன்
  • நவம்பர் 10 - 2வது போட்டி - கேபெர்ஹா
  • நவம்பர் 13 - 3வது போட்டி - செஞ்சுரியன்
  • நவம்பர் 15 - 4வது போட்டி - ஜோஹன்னஸ்பெர்க்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டி20 தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டி20 தொடரை நேரலையில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 குழும சேனல்களில் காணலாம்.

மொபைல் போனில் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்தில் போட்டிகளை நேரலையில் கண்டு களிக்கலாம்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் பங்கேற்க உள்ள உத்தேச அணிகள் விவரம் வருமாறு:

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் பெரேரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், ஆண்டில் சிமெலேன், லூதோ சிபம்லா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

இதையும் படிங்க:#HBD_Virat_Kohli: பிறந்த நாளில் விராட் கோலியின் 5 தரமான சம்பவங்கள்!

ABOUT THE AUTHOR

...view details