ஐதராபாத் :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் நாளை (மார்ச்.22) கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடக்க நாளில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கலை நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடகர் சோனு நிகம் உள்ளிட்டோர் ஐபிஎல் அறிமுக விழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அக்ஷய் குமார், டைகர் ஷெராப் நடிப்பில் Bade Miyan Chote Miyan அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் இருவரும் ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். அதேபோல் இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் பாடகர் சோனு நிகமின் பாடல்களும் குழுமியிருக்கும் ரசிகர்களை குதுகலிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். தனது கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, இந்த முறை விக்கெட் கீப்பராக அணியில் களமிறங்கி பின்னாலில் இருந்து கெய்க்வாட்டை வழிநடத்துவார் என தெரிகிறது. இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் காரணமாகவே கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டின் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :விலகினார் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்! - Ms Dhoni Steps Down As Captain