தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மைதானத்தை காய வைக்க டேபிள் பேன்! இருந்தும் பலனில்லை... 3வது நாளாக தொடரும் அவலம்! - Afg vs NZ test 3rd day Called off - AFG VS NZ TEST 3RD DAY CALLED OFF

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

Etv Bharat
Greater Noida Cricket Ground (@ACBOfficials)

By ETV Bharat Sports Team

Published : Sep 11, 2024, 2:23 PM IST

நொய்டா: நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானங்கள் இல்லாத நிலையில், அந்நாட்டு அணி இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தை தாய் மண்ணாக கருதி அங்கு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியை நடத்திக் கொள்ள கிரேட்டர் நொய்டா மைதானத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒதுக்கியது. இந்நிலையில், நொய்டாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

தொடர் கனமழை:

இந்நிலையில், கடந்த செப்.9ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையே முதல் நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. காலையில் இருந்து மழை பெய்யாததால் போட்டி நடைபெறும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் நாள் பெய்த மழையால் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், மைதானத்தில் தேங்கிய நீரை அவ்வளவு எளிதாக வெளியேற்ற முடியவில்லை, இதனால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இதனிடையே போட்டி நடுவர்கள், நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி, மற்ற வீரர்கள் மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் மைதானத்தை ஆய்வு செய்தனர்.

மைதானத்தில் பேட்ச் ஒர்க்:

இருப்பினும் ஒரு முன்னேற்றமும் காண முடியவில்லை. இதனால் போட்டடி இரண்டாது நாளுக்கு நகர்ந்தது. ஆனால் மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி 2வது நாளும் தொடர்ந்ததால் இரு நாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி நடுவர்கள் உள்ளிட்டோர் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

மேலும், மைதானத்தில் முதல் 30 யார்டு சர்கிளில் அதிகளவில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டுள்ளதால் அதனுள் மழை நீர் புகுந்தது. இதனால் மைதானத்தை காய வைக்க டேபிள் பேன் உள்ளிட்ட உபகரணங்களை மைதான ஊழியர்கள் பயன்படுத்தியும் பிரயோஜனம் இல்லை. இதனால் 2வது நாள் ஆட்டமும் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

மூன்று மைதானங்கள் ஒதுக்கீடு:

இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டமாவது தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் அதிலும் வீரர்களுக்கு எமாற்றமே மிஞ்சியது. நேற்று இரவு முதல் நொய்டாவில் மழை பெய்து வருவதால் மீண்டும் மைதானத்தில் மழை புகுந்தது. ஏற்கனவே மழை நீர் தேங்கி முதல் இரண்டு நாள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் பெய்த மழையால் மீண்டும் மைதானம் பழைய நிலைக்கு திரும்பியது.

இதனால் இரு நாட்டு வீரர்களும் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். மைதானம் குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், பெங்களூரு, கான்பூர் மற்றும் கிரேட்டர் நொய்டா என மூன்று மைதானங்களை சாய்ஸ்சாக நாங்க கேட்ட நிலையில், உள்ளூர் முதல் தர கிர்க்கெட் போட்டிகள் நடைபெறுவதால் கிரேட்ட நொய்டா மைதானத்தை பிசிசிஐ வழங்கியதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் கிரேட்டர் நொய்டா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி உள்ளது. கடைசியாக 2017ஆம் ஆண்டு கூட சில டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நொய்டா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"மைதானமா இது.. வாழ்க்கையில இனி இங்க வரமாட்டோம்"- 2வது நாளாக தொடரும் சோகம்! - Afg vs NZ Test Cricket

ABOUT THE AUTHOR

...view details