தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2024 புரோ லீக் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு! - FIH Pro League Indian Hockey team

புரோ ஹாக்கி லீக் தொடருக்கான 24 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
File Photo: Indian Hockey Team ((Source: Hockey India))

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 2:09 PM IST

டெல்லி: 2023-24 ஆண்டுக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் மே 22ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. நடப்பு சீசன் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. நடப்பு சீசனுல் மே 22ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி பெல்ஜியம், அன்ட்வெர்ப் நகரத்திலும், அதைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் 12ஆம் தேதி வரை லண்டன், இங்கிலாந்திலும் லீக் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய அணி தனது குரூப் பிரிவில் அர்ஜென்டினா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய அணிகளுடன் தலா இரண்டு முறை மோத உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மே 22ஆம் தேதி அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மிட்பீல்டர் ஹர்திக் சிங் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிஆர் ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதாக் ஆகியோர் கோல் கீப்பர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர். மிட்பீல்டரக்ள் விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, மன்பிரீத் சிங், ஷம்ஷேர் சிங், ஹர்திக் சிங், ராஜ்குமார் பால் மற்றும் முகமது ரஹீல் மௌசின் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "விரைவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், சிறந்த அணிகளை புரோ ஹாக்கி லீக் எதிர்கொள்வது நல்ல வாய்ப்பாக அமைகிறது. சிறந்த விளையாட்டுத் திறன் கொண்ட வீரர்கள் அணியில் இடம் பெற்று இருப்பது இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை பெறுவதை உறுதி செய்கிறது.

எந்தெந்த பகுதிகளில் வீரர்கள் வீக்காக இருக்கிறார்கள் எனப்தை அறிந்து கொண்டு பெங்களூருவில் இந்திய விளையாட்டு அணையத்தில் நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டுள்ளோம். புரோ லீக் ஹாக்கி தொடரை எதிர்நோக்கி உள்ள நிலையில், இந்திய அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்ப்பதாக" கூறினார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:

கோல் கீப்பர்கள்:

1. ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன்

2. கிரிஷன் பகதூர் பதக்

டிபண்டர்ஸ்:

3. ஜர்மன்ப்ரீத் சிங்

4. அமித் ரோஹிதாஸ்

5. ஹர்மன்ப்ரீத் சிங்

6. சுமித்

7. சஞ்சய்

8. ஜுக்ராஜ் சிங்

9. விஷ்ணுகாந்த் சிங்

மிட்பீல்டர்கள்:

10. விவேக் சாகர் பிரசாத்

11. நீலகண்ட சர்மா

12. மன்பிரீத் சிங்

13. ஷம்ஷேர் சிங்

14. ஹர்திக் சிங்

15. ராஜ்குமார் பால்

16. முகமது ரஹீல் மௌசின்

பார்வேட் பிளேயர்ஸ்:

17. மந்தீப் சிங்

18. அபிஷேக்

19. சுக்ஜீத் சிங்

20. லலித் குமார் உபாத்யாய்

21. குர்ஜந்த் சிங்

22. ஆகாஷ்தீப் சிங்

23. ஆரைஜீத் சிங் ஹண்டால்

24. பாபி சிங் தாமி

இதையும் படிங்க:டிராவிஸ் ஹெட் அபாரம்.. லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கிய ஹைதராபாத்! - Srh Vs Lsg

ABOUT THE AUTHOR

...view details