யோக்கியகர்தா: இந்தோனேஷியாவின் யோக்கியகர்தாவில் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞர் ஜங் ஜி ஜி மைதானத்தில் திடீரென சுருண்டு விழுந்தார். சற்று நேரம் என்ன நடக்கிறது என அறியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்த நிலையில், பயிற்சியாளர்கள் ஜங் ஜி ஜியை மீட்டும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் ஜங் ஜி ஜி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு ஜங் ஜி ஜி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜங் ஜி ஜியின் உயிரை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போது எதுவும் பலன் அளிக்காமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.